Home » குற்றம் » செல்போன் பறிப்பு: 3 பேர் கைது

செல்போன் பறிப்பு: 3 பேர் கைது

சென்னை, செப். 3:  கிண்டி அருகே பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்த பயணியிடம் செல்போனை பறித்துகொண்டு தப்பியோட முயன்ற கொள்ளையர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கிண்டி தொழிற் பேட்டை பேருந்து நிறுத்தத்தில் நேற்று மாலை பேருந்திற்காக காத்திக்கொண்டிருந்த பயணி ஒருவரின் செல்போனை 3 பேர் பறித்துகொண்டு தப்பியோட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள், கிண்டி போலீசில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து செல்போன், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர்கள் முத்து (வயது 22), சஞ்சய் (வயது 18), நூறு (வயது 18) என்பதும், கிண்டி ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*