Home » குற்றம் » ஐடி ஊழியர் மர்ம சாவு

ஐடி ஊழியர் மர்ம சாவு

சென்னை, செப். 3: முகப்பேர் அருகே தலையில் வெட்டுகாயங்களுடன் மர்மமான முறையில் ஐடி ஊழியரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

மதுரையை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 25). இவர், சென்னை முகப்பேரிலுள்ள கலைவாணர் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, தாம்பரத்தில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருடன் சக ஊழியர்களான ராஜேஷ், விஜய்காந்த் ஆகியோரும் உடன் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று காலை தன்னுடன் அறையில் வசிக்கும் அனைவரும் பணிக்கு சென்றிருக்க, ரங்கநாதன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். பணிமுடிந்து இரவு வீடு திரும்பிய நண்பர்கள், படுகாயங்களுடன் ரங்கநாதன் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ந்துபோய், உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த ஜே.ஜே.நகர் போலீசார், ரங்கநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கே.எம்.சி. மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இது தொடர்பாக அவரது நண்பர்கள் மற்றும் வீட்டருகே வசிப்பவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*