Home » இந்தியா » நடிகர் ரஜினிகாந்தின் அண்ணி காலமானார்

நடிகர் ரஜினிகாந்தின் அண்ணி காலமானார்

பெங்களூரு, செப்.3:நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயணராவ் மனைவி கலாவதிபாய் (வயது 70) நேற்றிரவு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து அறிந்ததும் ரஜினிகாந்த் உடனடியாக பெங்களூரு விரைந்தார்.

கலாவதிபாய்க்கு சிறுநீரகக் கோளாறு, சர்க்கரைநோய் ஆகியவை இருந்ததால் பெங்களூருவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்றிரவு 11.30 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவரது உயிர் பிரிந்தது.

அண்ணி இறந்த தகவல் கிடைத்ததும் ரஜினிகாந்த் பெங்களூருக்கு காலை 8.40 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் மூலம் புறப்பட்டுச் சென்றார். கலாவதிபாயின் உடல் அவர்களின் ‘குருகிருபா’ இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. உறவினர்களும் நண்பர்களும் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். கலாவதிபாய்க்கு ராமகிருஷ்ணன், மகாதேவ், பாண்டுரங்கன், ஆகிய 3 மகன்களும் ராதாபாய் என்ற மகளும் உள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*