Home » அரசியல் » உள்ளாட்சி தேர்தல்: 500 இடங்களில் பிஜேபி வெற்றி

உள்ளாட்சி தேர்தல்: 500 இடங்களில் பிஜேபி வெற்றி

பெங்களூரு, செப்.3:கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக ளுக்கான தேர்தலில் முதல் இடத்தை பிடிப்பதில் காங்கிரசுக்கும் பிஜேபிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

2079 வார்டுகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 31-ந் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளில் காங்கிரஸ் 560 இடங்களை வெற்றி பெற்றுள்ளது. பிஜேபி 499 இடங்களை கைப்பற்றி முன்னேறி வருகிறது.

மதச்சார்பற்ற ஜனதா தளம் 178 இடங்களை பிடித்துள்ளது. சுயேச்சை கள் 150 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.ஹோலே நரசிபுரா நகராட்சியில் அனைத்து 23 வார்டுகளையும் மதச் சார்பற்ற ஜனதா தளம் கைப்பற்றி உள்ளது. பல்வேறு நகராட்சிகளில் காங்கிர சுக்கும் பிஜேபிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு வருகிறது.

105 நகராட்சிகளில் பிஜேபி 28 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 24லும், மதச் சார்பற்ற ஜனதா தள கட்சிகள் 14 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*