Home » Flash News » பாலியல் புகாரில் கடற்படை அதிகாரி கைது

பாலியல் புகாரில் கடற்படை அதிகாரி கைது

கோட்டயம், செப்.3:8 முறை இந்திய ஆணழகன் பட்டத்தை வென்ற கேரளராவைச் சேர்ந்த கடற்படை அதிகாரி ஒருவர் கற்பழிப்பு குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

முரளி குமார் என்ற அந்த கடற்படை அதிகாரி மும்பையில் பணியாற்றி வந்தார். அவர் கோட்டயத்தை சேர்ந்த 20 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஓட்டல் அறை ஒன்றிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

திருமணம் செய்ய அந்த பெண் வற்புறுத்தியபோது அவர் சாக்குபோக்கு சொல்லி அதை மறுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ணின் தந்தை, முரளிகுமார் மீது போலீசில் கற்பழிப்பு புகார் அளித்தார். அதன் அடிப்படையில் முரளி குமாரை போலீசார் கோட்டயத்தில் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்ட அவர் சிறைக்கு அனுப்பப்பட்டு உள்ளார்.முரளிகுமார் 8 முறை இந்திய ஆணழகராகவும், 2 முறை ஆசிய ஆணழகராகவும் தேர்ந்தெடுக் கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. முரளிகுமார் மீது கடற்படை அதிகாரிகளிடம் புகார் அளிக்க இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*