Home » Flash News » ஜெயா நினைவு இல்ல பணிகள் தொய்வு

ஜெயா நினைவு இல்ல பணிகள் தொய்வு

ராமேஸ்வரம், செப்.3: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக்க மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்து, 1 ஆண்டு ஆகியும் நினைவிடம் அமைக்கும் பணியில் தேய்வு ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2015-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி கிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்று கொண்டார். ஓபிஎஸ் தலைமையில் தனி அணியாக செயல்பட்டு வந்தநிலையில், மீண்டும் இபிஎஸ் தலைமையிலான அணியில் இணைவதற்கு பல கோரிக்கைகளை முன் வைத்தனர். அதன்படி ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற வேண்டும் என ஓபிஎஸ் தெரிவித்திருந்தார்.

இதனை ஏற்று 2017ம் ஆண்டு ஆகஸ்டு 17ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவிடமாக அமைக்கப்படும் என அறிவித்தார். இதற்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வீடான வேதா இல்லத்தை அரசுடமையாக்கி நினைவிடமாக மாற்றுவதற்கு எங்களுக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை. எனினும் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு முன்னால் சட்டப்பூர்வ வாரிசுகளிடம் கருத்தை கேட்க வேண்டும் என குறிப்பி்ட்டுள்ளார்.

மறைந்த ஜெயலலிதா தனது வேதா இல்லத்தை குறிப்பிட்ட நபருக்கு வழங்க விருப்பம் ஏதும் தெரிவிக்கவில்லை. எனினும் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவின் உயில் படி, வேதா இல்லமானது எனக்கும், எனது சகோதரி தீபாவிற்கும் தான் சொந்தமாகும் என கடிதத்தில் கூறியுள்ளார் தீபக். இந்நிலையில் வேதா இல்லத்திற்கு சொந்தம் கொண்டாட தீபா உள்ளிட்டோர் வரலாம் என்பதால், போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீடு அருகே போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து 2017-ம் தேதி ஆகஸ்டு 19-ம் தேதி நினைவிடமாக மாற்றும் முதற்கட்ட பணிகளில் தொடங்கின. இதை தொடர்ந்து இரண்டாம் கட்ட 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய சென்னை கலெக்டராக இருந்த அன்பு செல்வன் போயஸ்தோட்ட இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பொதுப்பணிதுறை, வருவாய் துறையினர் சில மாற்றங்களை வேதா இல்லத்தில் மேற்கொண்டு இருந்த நிலையில், பொதுமக்கள் பார்வைக்காக வேதா இல்லம் 2018ம் ஆண்டு ஜெயலலிதா பிறந்த தினமான பிப்ரவரி 24-ம் தேதி திறந்து வைக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், ஓராண்டுக்கும் மேலாக வேதா இல்லத்தில் நினைவிடமாக மாற்றும் பணியில் தேய்வு ஏற்பட்டுள்ளது. ஆகவே விரைந்து வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக தொண்டர்கள் மட்டுமில்லாது பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*