Home » Flash News » ஜெ. மரணம்:தீபா, மாதவனுக்கு சம்மன்

ஜெ. மரணம்:தீபா, மாதவனுக்கு சம்மன்

சென்னை,செப்.3:ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில நாளை தீபா, மாதவன்,அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் சார்பில் ஜெயலலிதா, சசிகலா உறவினர்கள், அரசு டாக்டர்கள், அப்போலோ டாக்டர்கள், செவிலியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என இதுவரை 85 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. முழு உண்மையை வெளியே கொண்டு வரும் வகையில் முக்கிய நபர்களிடமும் ஆணையம் விசாரிக்க திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே எய்ம்ஸ் டாக்டர்கள் ஜி.சி. கில்னானி, அஞ்சன்டிரிகா, நிதிஷ் நாயக் ஆகிய மூன்று பேரும் ஆஜராக ஆணையம் சார்பில் கடந்த ஆகஸ்டு முதல்வாரம் சம்மன் அனுப்பப்பட்டது.இதை தொடர்ந்து அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் டாக்டர்களான இதயவியல் நிபுணர் நிதிஷ்நாயக், நுரையீரல் நிபுணர் கில்நானி, மயக்கவியல் நிபுணர் அஞ்சன் டிரிகா ஆகியோரிடம் கடந்த ஆகஸ்டு 23-ம் தேதி விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகினார்.

அன்றைய தினம் 7 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், மறுநாள் 24-ம் தேதி எய்ம்ஸ் மருத்துவர்களிடம் இரண்டாவது நாளாக விசாரணை ஆணையத்தில் ஆஜராகி நீதிபதி கேட்ட கேள்வி பதிலளித்தார். இதை தொடர்ந்து சசிகலா தரப்பினர் குறுக்கு விசாரணை மேற்கொண்டனர்.

ஆணையத்தின் விசாரணை விரைந்து முடிக்க நீதிபதி ஆறுமுகசாமி முடிவு செய்துள்ளார். அதன்படி அக்டோபர் 24-ம் தேதி விசாரணை ஆணைய பதவிகாலம் முடிவடைய உள்ள நிலையில், விசாரணை அறிக்கை அதற்கு முன்பதாக தமிழக அரசிடம் அளிக்க நீதிபதி ஆறுமுகசாமி முடிவு செய்துள்ளார். இதை தொடர்ந்து நாளை சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை செய்ய உள்ளது. அதன்படி விசாரணை ஆணையத்தில் நாளை ஆஜராக டாக்டர் சரவணன், தீபா அவரது கணவர் மாதவன், அப்பல்லோ மருத்துவர் ஜோசப், பாலமுருகன், ஆனூர் ஜெகதீசன், ராமலிங்கம் ஐஏஎஸ் ஆகியோர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் டாக்டர் சத்தியபாமா, ராமசந்திரன், அர்ச்சனா மற்றும் மனோஜ்பாண்டியன் ஆஜராகவும், 6-ம் தேதி சசிகலா தரப்பு குறுக்கு விசாரணைக்கு ஐபிஎஸ் ஜார்ஜ், டாக்டர்கள் விக்ரம், ராஜ் மாதங்கி ஆகியோர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*