Home » Flash News » ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தி இந்திய வீரர் தங்கம்

ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தி இந்திய வீரர் தங்கம்

ஜகர்தா, செப்.1: ஆசிய விளையாட்டு குத்துச்  சண்டை போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற அமித் தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.  49 கிலோ எடைப்பிரிவில் நடந்த குத்துச்சண்டை இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால், ஒலிம்பிக் சாம்பியனான கஜஸ்கஸ்தான் வீரர் அஸனை எதிர்கொண்டார். மிகவும் விறுவிறுப்பாக நடந்த போட்டியின் இறுதியில், இந்திய வீரர் அமித் கடுமையாக மல்லுக்கட்டி, கஜஸ்கஸ்தான் வீரரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இதன்மூலம், இந்தியாவிற்கு 14-வது தங்கம் கிடைத்துள்ளது. இதனையடுத்து, 14 தங்கம், 23 வெள்ளி, 29 வெண்கலம் உட்பட 66 பதக்கங்களுடன் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*