Home » Flash News » அடுத்த வீட்டு பெண்ணை குத்தி கொன்ற வாலிபர்

அடுத்த வீட்டு பெண்ணை குத்தி கொன்ற வாலிபர்

சென்னை, செப்.1:  தாயைப்பற்றி தவறாக பேசிய பக்கத்து வீட்டு பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-
நம்மாழ்வார் பேட்டை சுப்புராயன் 4-வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பைச்சேர்ந்தவர் பரிமளா (வயது 31). இவரது 2-வது கணவன் வெளிநாட்டில் தங்கி வேலை செய்து வருகிறார்.
பரிமாள நம்மாழ்வர் பேட்டையில் உள்ள ஒருவரது வீட்டில் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் பரிமளா வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது.
இந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி சென்று பார்த்தனர்.

அப்போது அதே வீட்டில், அடுக்குமாடியில் முதல் தளத்தில் வசிக்கும் சூர்யா (வயது 19) என்ற வாலிபர் வெளியே ஓடி வருவதை பொதுமக்கள் பார்த்தனர். உடனடியாக உள்ளே சென்று பார்த்த போது பரிமளா வயிற்றில் கத்தி குத்து காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.  இது குறித்து அப்பகுதி மக்கள் தலைமை செயலக குடியிருப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அந்த தகவலின்படி துணை கமிஷனர் ராஜேந்திரன் மேற்பார்வையில், உதவி கமிஷனர் பாலமுருகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது விசாரணை நடத்தினர்.

அப்போது அங்கிருந்து ஓடிய சூர்யா பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். சூர்யாவை கைது செய்த போலீசார் அவனிடம் விசாரணை நடத்திய போது அவன் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
நான் அங்குள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.தனது தாய் பாக்கியலட்சுமியை மேல் மாடியில் குடியிருந்த பரிமாள தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், அதனை தனது தாய் தன்னிடம் கூறி வருத்தப்பட்டார் .

இது குறித்து பரிமளாவிடம் சென்று கேட்டேன். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அவள் என்னையும் தரக்குறைவாக பேசியதால் ஆத்திரமடைந்து அடுப்பறையில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து பரிமளாவை குத்தினேன்.அப்போது அவள் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.அவள் இறந்தவுடன் வெளியே ஓடி வந்த போது தான் பொதுமக்கள் பார்த்து விட்டனர் என்றும் சூர்யா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*