Home » Flash News » நெதர்லாந்தைச் சேர்ந்த பெண் மர்மச்சாவு

நெதர்லாந்தைச் சேர்ந்த பெண் மர்மச்சாவு

சென்னை, ஆக.31: சென்னை தி.நகரில் உள்ள விடுதியில் தங்கியிருந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இளம்பெண் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலையா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர் லிண்டா ஐரீனா (வயது 24). இவர், கடந்த 27-ம் தேதி மதியம் 12.30 மணியளவில் தி.நகர் வெங்கடேசன் தெருவிலுள்ள தனியார் விடுதிக்கு சென்று, தன்னை பத்திரிக்கையாளராக அறிமுகம் செய்து அறை எடுத்து தங்கியுள்ளார்.

நேற்று மதியம் 12.30 மணியுடன் அவர் விடுதியில் இருந்து வெளியேற வேண்டியதாயிருந்தது. ஆனால், வெகு நேரம் ஆகியும் அறை திறக்கப்படாததால் சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து, விடுதி ஊழியர் சுரேஷ் என்பவர், மாற்று சாவி கொண்டு அறையை திறந்துபார்த்தபோது, லிண்டா படுக்கையில் சடலமாக கிடந்துள்ளார். அவரது அருகில் விஷ மருந்து பவுடர் இருந்துள்ளது. இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மாம்பலம் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார், லிண்டாவின் உடலை கைப்பற்றி சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதனயைடுத்து, மும்பையில் உள்ள நெதர்லாந்து தூதரகத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் லிண்டாவின் உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் கிடைக்கப்பெற்று, லிண்டாவின் உறவினர்கள் சென்னை வந்தபிறகு தான், அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். முதல்கட்டமாக, லிண்டா எதற்காக? யாரை சந்திப்பதற்காக சென்னை வந்தார்? என்ற கோணத்தில் விசாரணை நடந்துவருகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*