Home » சென்னை » மின்சார ரெயில் மோதி வாலிபர்கள் பலி

மின்சார ரெயில் மோதி வாலிபர்கள் பலி

சென்னை, ஆக. 30: சேத்துப்பட்டு ரெயில் நிலையம் அருகே 2 பேர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த சென்னை கடற்கரையிலிருந்து – தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் எதிர்பாராத விதமாக இவர்கள் மீது மோதி தூக்கி வீசியடித்தது.

இதில், அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியாயினர். இது குறித்த தகவலின்பேரில், எழும்பூர் ரெயில்வே போலீசார் சடலங்களை கைப்பற்றி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பலியான இருவரும் கீழ்ப்பாக்கம் சாஸ்திரி நகரை சேர்ந்த முனிவேல் (வயது 26), கிஷோர் குமார் (வயது 28) என தெரியவந்துள்ளது.

இன்று காலை 8 மணியளவில் நடந்த இந்த விபத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. சமீபத்தில் கூட, கோடம்பக்கம் ரெயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தை 3 வாலிபர்கள் கடக்க முயன்றபோது, ரெயில் மோதி பலியானது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*