Home » குற்றம் » வழிப்பறி ஆசாமிகள் இருவர் கைது

வழிப்பறி ஆசாமிகள் இருவர் கைது

சென்னை, ஆக.30:வடபழனியில் நடந்து வந்தவரை வழிமறித்து பணம் பறித்ததாக வழிப்பறி ஆசாமிகள் இருவரை கைது செய்து லேப்டாப், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

வடபழனி துரைசாமி சாலையைச்சேர்ந்தவர் சத்தியசுந்தரம் (வயது 35).இவர் நேற்றிரவு வடபழனியில் நடந்து வந்துகொண்டிருந்தபோது இருவர் அவரைமடக்கி தாக்கிபணம் பறித்தனர். அவர் சத்தம்போடவே பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். வடபழனி போலீசார் இருவரையும் விசாரித்த போது தண்டையார்பேட்டையைச்சேர்ந்த முகமது ரபீக்(வயது 31), சையத் அபுதாபி (வயது 27) என்பது தெரியவந்தது.இருவரிடமும் 24 லேப்டாப் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து
விசாரணை நடத்தி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*