Home » விளையாட்டு » 4-வது டெஸ்ட்:தொடரை சமன் செய்யுமா இந்தியா..?

4-வது டெஸ்ட்:தொடரை சமன் செய்யுமா இந்தியா..?

சவுதாம்ப்டன், ஆக.30: இங்கிலாந்திற்கு எதிராக இன்று தொடங்கவுள்ள 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை சமன் செய்யும் நோக்கில் இந்திய அணி களம்காண்கிறது.

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் ஏற்கனவே மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது.
இதில், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை இங்கிலாந்தும், 3-வது டெஸ்ட்டை இந்தியாவும் கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில், சவுதாம்ப்டனில் உள்ள ரோஸ் பௌல் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில், தொடரை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்தும், சமன் செய்யும் நோக்கில் இந்தியாவும் தீவிரம் காட்டும் என்பதில் சந்தேகமில்லை.

இன்றைய போட்டியில் இந்திய அணியில் முரளி விஜய் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவருக்கும் பதிலாக இளம் வீரர்களான பிரித்வி ஷா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*