Home » விளையாட்டு » ரொனால்டோவின் பைசைக்கிள் கிக்

ரொனால்டோவின் பைசைக்கிள் கிக்

நையான், ஆக.30: ஜுவென்டஸ் அணியின் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த பைசைக்கிள் கிக் கோல், கடந்த சீசனுக்கான சிறந்த ஐரோப்பிய கோல் என்ற பெருமையை பெற்றுள்ளது.

ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்தார் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை, . கடந்த மாதம் இத்தாலி நாட்டை சேர்ந்த ஜுவென்டஸ் 100 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியது. தற்போது ஜுவென்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார், ரொனால்டோ.

இந்த நிலையில், கடந்த சீசனின் சிறந்த கோல் எது என தேர்ந்தெடுக்க ஐரோப்பிய கால்பந்து கழகம் வாக்குப்பதிவு நடத்தியது. இதில், பெண்கள், சிறுவர்கள் என பல அனைத்து தரப்பினரும் பங்கேற்று தங்களின் வாக்களித்தனர். இறுதி முடிவில், ஐரோப்பிய ஆடவர் கால்பந்து போட்டிகளில் இருந்து ரொனால்டோவின் கோல் தேர்ந்தெடுக்கப்பட்டது.

மொத்தம் 3.5 லட்சம் வாக்காளர்களில், சுமார் 2 லட்சம் பேர் ரொனால்டோவின் கோலுக்காக வாக்களித்தனர். கால்பந்து விளையாட்டிலேயே மிகவும் கடினமாக பார்க்கப்படுவது பைசைக்கிள் கிக் கோல்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*