Home » சினிமா » ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’

‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’

விகாஷ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் விகாஷ் ரவிச்சந்திரன் தயாரித்துள்ள படம் ராஜாவின் பார்வை ராணியின் பக்கம். இந்த படத்தில் ஆதவா கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் 8 பேக் உடற்கட்டுடன் அதிரடி சண்டைக் காட்சியில் நடித்துள்ளார். நாயகியாக அவந்திகா நடித்திருக்கிறார். இவர் மலையாள படங்களில் நடித்தவர் மற்றும் மதுமிதா, கானாஉலகநாதன், சிங்கப்பூர் தீபன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய லியாண்டர் லீ மார்டின் இசை அமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி அழகுராஜ் இயக்கி உள்ளார்.

படம் பற்றி இயக்குனர் கூறுகையில், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக்கி இருக்கிறோம். தன்னை ஏமாற்றிய காதலியை பழிவாங்க ஒரு பெரிய டானின் உதவியை நாடிச்செல்கிறார் நாயகன். அந்த டான் நாயகனை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டார் என்பது காமெடி கலவையாக உருவாக்கி இருக்கிறோம். படம் வருகிற செப்டம்பர் 7 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*