Home » சினிமா » சீமராஜா படத்திற்கு யு சான்று

சீமராஜா படத்திற்கு யு சான்று

பொன்ராம் இயக்கத்தில் தற்போது சிவகார்த்திகேயன் சீமராஜா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். கவுரவ தோற்றத்தில் கீர்த்திசுரேஷ் வருகிறார். டி.இமான் இசையமைத்துள்ளார்.

24 ஏ.எம். ஸ்டுடியோஸ் சார்பில் டி.ராஜா தயாரித்துள்ள இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 13-ம் தேதி வெளியாகி உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 3-ம் தேதி பிரமாண்டமாக மதுரையில் நடைபெற்றது. இந்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள வாயாடி பெத்த புள்ள பாடல் சமீபத்தில் வெளியானது. சிவகார்த்திகேயன் தனது மகள் ஆராதனாவுடன் இணைந்து பாடிய இந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், படம் சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள் எந்த வித வெட்டும் இல்லாமல் யு சான்று வழங்கி உள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*