Home » சினிமா » விஜய் – அட்லி படத்தை ஏஜிஎஸ் தயாரிக்கிறது

விஜய் – அட்லி படத்தை ஏஜிஎஸ் தயாரிக்கிறது

நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து நடிகர் விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லியுடன் இணையவுள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ். மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களில் ஏதாவது ஒன்று தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கவுள்ளது உறுதியாகி உள்ளது. இது குறித்த முக்கிய அறிவிப்பு வரும் செப்டம்பர் 13-ம் தேதி வெளியாகவுள்ளது. அன்று படத்தின் தலைப்பு மற்றும் உடன் நடிக்கும் நடிகர், நடிகையர் பற்றிய விவரங்கள் வெளியாகும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கு முன்பாக அட்லி-விஜய் கூட்டணியில் உருவான தெறி மற்றும் மெர்சல் படங்கள் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. மேலும் விஜயை ரூ.100 கோடி வசூல் நாயகனாக உயர்த்திய படம் மெர்சல். இது தவிர சிறந்த சர்வதேச நடிகர் பட்டியலிலும் விஜய் பெயரை இடம் பெற வைத்தது இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*