Home » சினிமா » 100வது நாள் விழா கொண்டாடிய இரும்புத்திரை

100வது நாள் விழா கொண்டாடிய இரும்புத்திரை

தமிழ் சினிமா தற்போதுள்ள சூழ்நிலையில் ஒரு படம் ஒருவாரம் ஓடுவதே குதிரை கொம்பாக உள்ளது. நல்ல படமாக இருந்தாலும் 25 நாட்கள் மட்டுமே ஓடுகிறது. 100 நாள் விழா கொண்டாடிய படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜூன், சமந்தா நடிப்பில் வெளிவந்த இரும்புத்திரை படம் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது.

இதன் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் இரும்புத்திரை படத்தின் 100வது நாள் விழா மற்றும் விஷாலின் பிறந்தநாள் விழா என 2 விழாவாக கொண்டாடப்பட்டது. இதில் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.கே.செல்வமணி, இயக்குனர் மித்ரன், அர்ஜூன், சமந்தா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கேடையங்கள்
வழங்கப்பட்டன.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*