Home » Flash News » சென்னையில் பட்டா கத்தியுடன் மாணவர்கள் ரகளை

சென்னையில் பட்டா கத்தியுடன் மாணவர்கள் ரகளை

சென்னை, ஆக. 30: சென்னையில் மாநகரப் பேருந்தின் படியில் நின்றுக்கொண்டு பட்டாக்கத்தியை சாலையில் உரசியபடி பயணம் செய்தது தொடர்பாக, கல்லூரி மாணவர் ஒருவர் பிடிப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரனோடையில் இருந்து பிராட்வே வரை செல்லும் 54 எஃப் மாநகரப் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள், சத்தம் எழுப்பிக்கொண்டும் அரட்டை அடித்துக்கொண்டும் பயணம் செய்துள்ளனர். மேலும், பேருந்து படியில் நின்றபடி பட்டாக்கத்திகளை கையில் பிடித்துகொண்டு சாலையில் உரசியபடியே சென்றுள்ளனர். இது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் இன்று வைரலாக பரவின.

இது குறித்து அண்ணாசதுக்கம் போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்திவந்தனர். வீடியோ காட்சியின்படி, தங்க சாலை அருகே பேருந்து சென்றுக்கொண்டிருந்த போது, இந்த சம்பவம் நடந்ததால் அப்பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்களாக இருக்கலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், இது தொடர்பாக மிண்ட் மூலக்கொத்தளம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஆனந்தராஜ் பிடிப்பட்டுள்ளார். இவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இவர் அளிக்கும் தகவலின்பேரில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் பிடிக்க முடிவுசெய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*