Home » Flash News » தமிழக வீரருக்கு ரூ.30 லட்சம்: முதலமைச்சர் அறிவிப்பு

தமிழக வீரருக்கு ரூ.30 லட்சம்: முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஆக. 29: ஆசிய விளையாட்டு போட்டி கலப்பு குழு தொடர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த வீரர் ஆரோக்கிய ராஜிவ்-க்கு தமிழக அரசு சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத் தொகையை அறிவித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்கடிதம் அனுப்பியுள்ளார்.

இது குறித்து முதல்வரின் வாழ்த்துக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளவை: இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்தா மற்றும் பலேம்பங்கில் நடந்துவரும் ஆசிய விளையாட்டு போட்டியின் கலப்பு தொடர் ஓட்டப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகளையும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ஊக்கத் தொகையை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2011-ம் ஆண்டு முதல் அறிவித்திருந்தார்.

அதன்படி, ஆசிய போட்டியின் கலப்பு குழு தொடர் ஓட்டப்போட்டியில் பங்கேற்று சாதனை படைத்த தமிழக வீரர் ஆரோக்கிய ராஜிவ்-க்கு ரூ. 30 லட்சம் ஊக்கத் தொகை தமிழக அரசு சார்பில் வழங்கப்படும். இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*