Home » சினிமா » விஜய்யின் சர்கார் படப்பிடிப்பு முடிந்தது

விஜய்யின் சர்கார் படப்பிடிப்பு முடிந்தது

சென்னை, ஆக.29: துப்பாக்கி, கத்தி ஆகிய கமர்ஷியல் ஹிட் படங்களுக்குப் பிறகு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும், நடிகர் விஜய்யும் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் சர்கார். இதில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார்.

மேலும் வரலஷ்மி, ராதாரவி, பழ.கருப்பையா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதன் பாடல் வெளியீட்டு விழா அக்டோபர் 2-ம் தேதி நடைப்பெறும் என அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. விநாயகர் சதுர்த்திக்கு டீசர் வெளியாகும் என உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் வெளியாகின. இருப்பினும் அன்றைய தினம் ரஜினியின் 2.0 படத்தின் டீசர் வெளியாவதால் அதற்கு முன்னதாகவே டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் படத்தில் தன்னுடைய காட்சிகளை விஜய் நடித்து முடித்துள்ளார். அதோடு சர்கார் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி உள்ளன. ஏற்கனவே ஒரு பகுதிக்கு விஜய் டப்பிங் பேசி உள்ளார்.

இந்நிலையில், படத்தின் சிங்கிள் எனப்படும் ஒரு பாடல் செப்டம்பர் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்கார் ஆரம்பித்ததிலிருந்து படத்தின் எதிர்ப்பார்ப்பு எகிறிக் கிடக்கும் நிலையில், வரும் தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸ் ஆவது குறிப்பிடத் தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*