Home » அரசியல் » மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி புதிய கட்டுப்பாடு

மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி புதிய கட்டுப்பாடு

சென்னை, ஆக.29:ரஜினி மக்கள்மன்ற நிர்வாகிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை ரஜினி விதித்துள்ளார்.

ரஜினி மக்கள் மன்றத்தின் தலைவரும், நடிகருமான ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நமது மன்ற அமைப்பை வலுப்படுத்துவதற்கும், அன்றாட செயல்பாடுகளை நெறிப்படுத்துவதற்காகவும் மன்றத்தின் நிர்வாக விதிகள் வரையறை செய்யப்பட்டு உள்ளன.
மன்ற நிர்வாகிகளோ, உறுப்பினர்களோ தங்களின் வாகனங்களில் மன்ற கொடியை நிரந்தரமாக பொருத்தக்கூடாது.

மன்ற நிகழ்ச்சிகள், கூட்டங்கள், மாநாடுகள் நடக்கும் போது மன்ற உறுப்பினர்கள் பிரசாரத்திற்காக வாகனங்களில் பயன்படுத்தலாம். நிகழ்ச்சி முடிந்த பிறகு மன்றக்கொடிகளை வாகனங்களில் இருந்து அகற்றிட வேண்டும். மன்றக்கொடி துணியால் மட்டுமே தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.இளைஞர் அணியில் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களே இருக்க வேண்டும்.

சாதி, மத சம்பந்தப்பட்ட சங்கங்களிலோ அமைப்புகளிலோ உறுப்பினராக உள்ளவர்கள் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினராக சேர அனுமதியில்லை.மன்ற பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்வு, நியமனம், நீக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலைமையின் முடிவே இறுதியானது. மன்ற கட்டுப்பாட்டை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

தீவிர குற்ற நடவடிக்கை புகார் எழுந்தால் சம்பந்தப்பட்ட உறுப்பினர் உடனடியாக தற்காலிக நீக்கம் செய்யப்படுவார். குற்றம் நிரூபணமானால் அவர் மன்றத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்.

ஒழுங்கு நடவடிக்கை, பரிந்துரை மற்றும் நடவடிக்கைகள் என அனைத்திலுமே ரகசியம் காக்கப்பட வேண்டும். தலைமையின் அறிவுறுத்தல் இல்லாமல் ஊடகங்களில் இதுகுறித்து கருத்து சொல்லக்கூடாது.ஒரு குடும்பத்தில் ஒரு உறுப்பினருக்கு மட்டுமே பொறுப்போ அல்லது பதவியோ வழங்கப்படும். உள்ளிட்ட பல்வேறு கட்டளைகளை விதித்துள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*