Home » குற்றம் » செல்போன்கள் பறிப்பு: போலீஸ் வலை

செல்போன்கள் பறிப்பு: போலீஸ் வலை

சென்னை, ஆக.29: சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் சாலையில் நடந்து சென்றவர்களிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் தனவேல் (வயது 41). இவர் ஜானிஜான்கான் ரோட்டில் பிரிண்டிங் ப்ரஸ் வைத்துள்ளளார். இந்த நிலையில், மயிலாப்பூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டு தனது பைக்கில் வீடுதிரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, பீட்டர்ஸ் ரோடு போஸ்ட் ஆபிஸ் அருகே பைக்கில் வந்த 2 பேர் சட்டையின் மேல் பாக்கெட்டில் வைத்திருந்த இவரது செல்போனை லவகமாக பறித்துச் சென்றனர். இது குறித்து அண்ணாசாலை போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இதேபோல், ஓட்டேரியை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (வயது 30),

கோட்டூர்புரத்தை சேர்ந்த சாந்தகுமார் (வயது 32) ஆகியோரிடமும் செல்போன் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, சூளையை சேர்ந்த சண்முகம் (வயது 50) மகள் திருமணத்திற்காக நகை வாங்கிவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளார். வீட்டில் வந்து பார்க்கும்போது 13 சவரன் நகை வைத்திருந்த பை காணாமல் போனது தெரியவந்ததையடுத்து, தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*