Home » Flash News » என்டிஆரின் மகன் சாலை விபத்தில் மரணம்

என்டிஆரின் மகன் சாலை விபத்தில் மரணம்

ஐதராபாத், ஆக.29: என்டி ராமாராவ் மகனும், நடிகர் ஜூனியர் என்டிஆர் தந்தையுமான நந்தமூரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் உயிரிழந்தார்.

ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் என்டி ராமாராவின் மகன் என்டிஆர் நந்தமூரி ஹரிகிருஷ்ணா தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவராக இருந்தார். இவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஹரிகிருஷ்ணா நடிகர் ஜூனியர் என்டி ஆரின் தந்தையாவார்.

இவர் கட்சி பொதுக் கூட்டத்துக்காக நல்கொண்டா மாவட்டத்தில் நார்கெட்பள்ளி-அட்டங்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவரது கார் விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.ஹரிகிருஷ்ணாவின் மகன் ஜானகிராமும் 2014 நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*