Home » சினிமா » மகத் வெளியேற்றம்: யாஷிகா கண்ணீர்

மகத் வெளியேற்றம்: யாஷிகா கண்ணீர்

சென்னை, ஆக.27: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று மகத் வெளியேற்றப்பட்டார். இதனால் அவரது நெருங்கிய தோழியான யாஷிகா கண்ணீர் விட்டு கதறுகிறார்.

பிக்பாஸ் வீட்டில் எப்போதும் இல்லாத வகையில் கடந்த ஒரு வாரமாகப் போட்டியாளர்கள் வரம்பு மீறி நடந்து கொண்டனர். குறிப்பாக மும்தாஜ் மற்றும் டேனியிடம் மகத் வரம்பு மீறி நடந்து கொண்டதற்குப் பார்வையாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன் இதுகுறித்து கடந்த சனிக்கிழமை விசாரித்தார். பின்னர் மகத் செய்தவை குறித்து ஒரு குறும்படமும் காண்பித்தார். நேற்றைய நிகழ்ச்சியில் மகத் செய்த குற்றத்திற்காக ரெட் கார்ட் காட்டி அவரைப் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றினார். எனவே இனி யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் தனியாக ஆட்டத்தை ஆடவேண்டும்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் பிரோமோவில் வீட்டில் உள்ள அனைவரும் அழுவதை போல காட்டப்படுகிறது. ஒரு பக்கம் நம் வீடு சந்தோஷமாக இருந்தாலும், மறுபக்கம் வீடு களை இழந்து இருக்கிறது என்று ரித்விகா ஒரு அறிக்கையை படிக்க, வீட்டில் உள்ள சென்ட்ராயன், யாஷிகா உட்பட அனைவரும் கண் கலங்கி பிக் பாஸ் வீட்டை அழ வைக்கின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*