மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=34503
Export date: Wed Feb 20 8:22:05 2019 / +0000 GMT

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் மரணம்


புனோரிடா,ஆக.27: அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தில் மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்ததாகவும் , பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அப்பகுதி போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.

புளோரிடாவின் ஜாக்சன்வில்லேவில் எனும் மதுபான விடுதியில் வார விடுமுறையையொட்டி வீடியோ கேம் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. அப்போது, போட்டியில் தோல்வி அடைந்த ஒருவர் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்ததாகவும் பயந்தோடிய பலர் நெரிசலலில் சிக்கி படுகாயம் அடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
Post date: 2018-08-27 09:19:33
Post date GMT: 2018-08-27 09:19:33

Post modified date: 2018-08-27 09:19:33
Post modified date GMT: 2018-08-27 09:19:33

Export date: Wed Feb 20 8:22:05 2019 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com