Home » முக்கிய செய்தி » இந்தியாவுக்கு மேலும் இரு வெள்ளி பதக்கங்கள்

இந்தியாவுக்கு மேலும் இரு வெள்ளி பதக்கங்கள்

ஜகார்த்தா, ஆக.26: ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடைபெற்ற குதிரை தடை தாண்டும் போட்டியில் ஒற்றையர் பிரிவில் பௌத் மிர்சாவும், குழுவிற்கான போட்டியில் இந்தியாவின் ராகேஷ் குமார், ஆசிஷ் மாலிக், ஜிதேந்தர் சிங் ஆகியோரை கொண்ட இந்திய அணியும் வெள்ளிப்பதக்கங்களை பெற்றுள்ளன.

குதிரை தடை தாண்டும் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீரர் ஓய்வாயேசியாக்கி தங்கம் வென்றார். இந்தியாவை சேர்ந்த பௌத் மிர்சா வெள்ளி வென்றார். இதில் சீனாவுக்கு வெண்கலம் கிடைத்தது. இதே போல் குதிரை தடை தாண்டும் போட்டியின் குழுவிற்கான போட்டியிலும் இந்தியா வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளது.

வில்வித்தை போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய ஆண்கள் அணி காலிறுதிக்குள் நுழைந்தது. இந்திய அணியினர் கத்தார் அணியுடன் மோதி 227-213 என்ற புள்ளி கணக்கில் முன்னணி பெற்று தகுதி பெற்றனர். இந்திய அணியில் அபிஷேக் வர்மா, ஹமான் சாய்னி, ரஜாட் சவுகான் ஆகியோர் நான்கு செட்களில் வெற்றி பெற்றனர். இரண்டாவது மற்றும் 3-வது செட்களில் 65-55 மற்றும் 56-54 என்ற புள்ளி கணக்கில் வெற்றியை நெருங்கி உள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*