Home » சினிமா » விஷால் நடிக்கும் ‘அயோக்யா’

விஷால் நடிக்கும் ‘அயோக்யா’

லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில், விஷால் நடிக்கும் ‘அயோக்யா’ படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது. வெங்கட் மோகன் இயக்குகிறார்.

சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் தயாரிப்பாளர் ஜி.கே. ரெட்டி , கலைப்புலி எஸ்.தாணு, ரவி பிரசாத் , கே.எஸ்.ரவிக்குமார், காட்ராகட்ட பிரசாத், கிருஷ்ணா ரெட்டி , இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பார்த்திபன் , கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்க, கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். மூர்த்தி கலையமைக்க, ரூபன் எடிட்டிங் செய்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை ஈசிஆரில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான செட்டில் நடைபெறவுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*