மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=34344
Export date: Fri Sep 21 19:13:21 2018 / +0000 GMT

சக்திவாய்த்த கதிரியக்க சாதனம் மாயம்


கோலாலம்பூர்,ஆக. 24:ரேடியோஆக்டிவ் டிஸ்பெர்ஸல் டிவைஸ் எனப்படும் இரிடியம் எனப்படும் கதிரியக்க மூலக்கூறு உள்ள சாதனம் ஒன்று மலேசியாவில் மாயமாகி உள்ளது

ரேடியோஆக்டிவ் டிஸ்பெர்ஸல் டிவைஸ் மலேசிய அரசுடன் ஒப்பந்தம் முறையில் இயங்கும் நிறுவனம் ஒன்றின் சாதனம் ஆகும். மின்சாரம் தயாரிக்கவும், எரிபொருள் தயாரிக்கவும் இந்த சாதனம் பயன்படுத்தப்படும். இதில் இருக்கும் இரிடியம் வற்றாத கதிரியக்க பொருள் ஆகும். இதை வைத்து அணுகுண்டும் தயாரிக்கலாம்.

இந்த சாதனத்தை, நேற்று கோலாலம்பூரில் இருந்து சேரேம்பென் நகர் நோக்கி இரவோடு இரவாக இடமாற்றப்பட்டுள்ளது. இரண்டு டிரைவர்கள், இதை பெரிய டிரக்கின் பின்புறம் வைத்து கொண்டு சென்று இருக்கிறார்கள். அவர்கள் சேரேம்பென் நகரில் உள்ள அலுவலகத்திற்கு சோதனைக்காக இதை கொண்டு சென்று இருக்கிறார்கள்.

ஆனால், அலுவலகத்தில் சென்று பார்த்த போது, டிரக்கின் உள் இருந்த கதிரியக்க சாதனம் காணாமல் போய் உள்ளது. எப்படி காணாமல் போனது என்று யாருக்கும் தெரியவில்லை. டிரைவர்களுக்கும் இந்த சாதனம் எப்படி காணாமல் போனது என்று தெரியவில்லை என்கிறார்கள். அப்படியே மாயமாக மறைந்ததாக கூறுகிறார்கள்
Post date: 2018-08-24 09:20:56
Post date GMT: 2018-08-24 09:20:56

Post modified date: 2018-08-24 09:20:56
Post modified date GMT: 2018-08-24 09:20:56

Export date: Fri Sep 21 19:13:21 2018 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com