Home » இந்தியா » ஜம்முவில் 3 பயங்கரவாதிகள் சுற்றி வளைப்பு

ஜம்முவில் 3 பயங்கரவாதிகள் சுற்றி வளைப்பு

அனந்த்நாக்,ஆக.24:ஜம்மு காஷ்மீரில் அனந்த்நாக் அருகேயுள்ள கோகேர்நாக் பகுதியில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று காலை முதல் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. இந்த சண்டையில் 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் துப்பாக்கி சண்டை நடைபெற்று கொண்டிருக்கும் கோகேர்நாக் பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. என்கவுண்டர் குறித்து ஜம்மு காஷ்மீரின் தலைமை போலீஸ் அதிகாரி எஸ் பி வாலித், துப்பாக்கி சண்டை நிறுத்தப்பட்டு விட்டது, பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் எனக் கூறினார். இதற்கிடையில் என்கவுண்டரில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*