Home » Flash News » படகு போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்

படகு போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்

ஜகர்தா, ஆக.24:இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான இலகுரக துடுப்பு படகு ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் துஷ்யந்த், இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகித் குமார், பகவான் தாஸ் வெண்கலம் பதக்கங்களை வென்றனர்.

மேலும், 4 வீரர்கள் பங்கேற்கும் துடுப்பு படகு போட்டியில் இந்திய அணியில் சவார்ன் சிங், போகனால், ஓம் பிரகாஷ், சுக்மீத் சிங் ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் இணைந்து துடிப்புடன் துடுப்பு போட்டு, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 6 நிமிடம் 17.13 வினாடிகளில் கடந்து தங்கம் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

இதேபோல், நீச்சல் போட்டியில் ஆண்களுக்கான 50 மீட்டர் பிரஸ்டிரோக் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சந்தீப் செஜ்வால் தகுதி பெற்றார். அவர் தகுதி சுற்றில் 27.95 வினாடியில் கடந்து 6-வது இடத்தை பிடித்து முன்னேறினார். இதன்மூலம், அவர் பதக்க வாய்ப்பை உறுதிசெய்துள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*