Home » விளையாட்டு » கனவு நனவானது: விஹாரி ஹேப்பி

கனவு நனவானது: விஹாரி ஹேப்பி

மும்பை, ஆக.23:  ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது கனவு. அது எனக்கு நனவாகி இருக்கிறது என்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு தேர்வாகியுள்ள ஹனுமா விஹாரி கூறியுள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில், முரளி விஜய், குல்தீப் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு, மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிருத்வி ஷா, காக்கிநாடாவைச் சேர்ந்த ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டுள்ளனர்.

63 முதல் தர போட்டியில் விளையாடியுள்ள விஹாரி, 15 சதங்களுடன் 5,132 ரன்களை குவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது: இந்திய அணிக்கு தேர்வான செய்தி கிடைத்ததும் மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. ஏனென்றால் கண்டிப்பாக இந்திய அணியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்திருந்தேன்.

கடந்த சில வருடங்களாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறேன். அதற்கான பலன் கிடைக்கும் என்பது என் நம்பிக்கை. அது கிடைத்திருக்கிறது. ஒவ் வொரு கிரிக்கெட் வீரருக்கும் இங்கிலாந்தில் டெஸ்ட் விளையாடுவது கனவு. அது எனக்கு நனவாகி இருக்கிறது, என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*