Home » Flash News » கேரளா வெள்ளம்: மோடி பார்வையிடுகிறார்

கேரளா வெள்ளம்: மோடி பார்வையிடுகிறார்

திருவனந்தபுரம், ஆக.17:மழையின் கோரத்தாண்டவத்தால் வெள்ளத்தில் மிதக்கும் கேரளாவில் ஏற்பட்டுள்ள சேதங்களை பிரதமர் நரேந்திர மோடி நாளை பார்வையிடுகிறார். அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுடன் வெள்ளச்சேதங்கள் குறித்து ஆய்வு நடத்துகிறார்.

கேரளாவில் 3 வாரங்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு கேரளா பகுதிகளில் வெள்ளப்பெருக்கம் ஏற்பட்டு உள்ளது. கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை 167-க்கும் மேற்பட்டோர் பேர் பலியாகியுள்ளனர். கனமழை காரணமாக கேரளாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரப்பி வருகின்றனர். அதில் குறிப்பாக 20-க்கு மேற்ப்பட்ட அணைகள் தங்கள் கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்படுகிறது.

கேரளத்தின் 7 மாவட்டங்களில் வெள்ள சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்ட்டு உள்ளது. பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோட் மற்றும் இடுக்கி மாவட்டங்களாகும். இதில் இடுக்கி மடட்டத்தில் வரும் ஆகஸ்ட் 17-ம் நாள் வரை ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கேரளாவின் நிலை குறித்து தொலைபேசி வாயிலாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்ளிடன் கேட்டறிந்ததாகவும், இன்று மாலை வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட கேரளா செல்கின்றேன் என பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

வாஜ்பாயின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு விட்டு இன்று மாலை கேரளா செல்கிறார். இன்றிரவு கேரளாவில் தங்கும் பிரதமர் நாளை ஹெலிகாப்டர் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார். பின்னர் வெள்ளம் பற்றிய ஆய்வை மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துகிறார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*