w
Home » Flash News » கேரளாவில் பள்ளி கல்லூரிக்கு ஆக.28 வரை விடுமுறை

கேரளாவில் பள்ளி கல்லூரிக்கு ஆக.28 வரை விடுமுறை

திருவனந்தபுரம், ஆக.17:கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 28 ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

கடந்த 15 தினங்களாக கேரளாவில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால், பொது மக்கள் அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

அங்குள்ள 27 அணைகளும் திறந்துவிடப்பட்டுள்ளன. சுமார் 26 வருடங்களுக்குப் பிறகு, இடுக்கி அணையின் 5 மதகுகளும் திறக்கப்பட்டுள்ளன. கனமழையின் காரணமாக இதுவரை 97-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் அம்மாநிலத்தில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*