Home » Flash News » மறைந்த வாஜ்பாய் உடல் இன்று மாலை தகனம்

மறைந்த வாஜ்பாய் உடல் இன்று மாலை தகனம்

புதுடெல்லி, ஆக.17: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில முதலமைச்சர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வாஜ்பாயின் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

வாஜ்பாய் வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் அவரது உடலுக்கு இன்று காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பொது மக்கள் அஞ்சலிக்கு பிறகு மாலை 4 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்படுகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*