Home » விளையாட்டு » பாகிஸ்தான் கேப்டன் சர்ச்சை பேச்சு

பாகிஸ்தான் கேப்டன் சர்ச்சை பேச்சு

கராச்சி, ஆக. 13: அடுத்த ஆண்டின் (2019) சுதந்திர தினத்தை உலகக்கோப்பை வெற்றியுடன் கொண்டாடவுள்ளதாக பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் அகமது கூறியுள்ளது, சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் பல கருத்து வேறுபாடுகள், மோதல்கள் இருந்தாலும் அவை அப்பட்டமாக வெளிப்படும் இடம் கிரிக்கெட் களம் என்றே கூறலாம். சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது கூறுகையில், 2017-ம் ஆண்டு சுதந்திர தினத்தை இந்தியாவை வென்று சாம்பியன்ஸ் கோப்பையோடு கொண்டாடினோம்.

அதேபோல அடுத்த ஆண்டு (2019) சுதந்திர தினத்தை உலகக்கோப்பையோடு கொண்டாடுவோம், என்று கூறியுள்ளார். அடுத்த மாதம் வரவிருக்கும் ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் மோதவுள்ள நிலையில், பாகிஸ்தான் கேப்டனின் சர்ச்சை பேச்சு எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது போன்று உள்ளதாக கருதப்படுகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*