மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் http://www.maalaisudar.com/?p=33712 Export date: Mon Feb 18 22:12:54 2019 / +0000 GMT |
இந்தோனேஷியா தீவின் உயரம் உயர்ந்தது![]() லாம்போக் தீவில் சமீபத்தில் 2 தடவை நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 2-வது நில நடுக்கம் 6.9 ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் அவ்வப்போது உருவாகி மக்களை அச்சுறுத்தின. ஆயிரக் கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இடிபாடுகளை அகற்றி இறந்தவர் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. லாம்போ தீவில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவதால் அந்த தீவு வழக்கத்தை விட 25 செ.மீ. அதாவது 10 இஞ்ச் உயர்ந்துள்ளது. இந்த தகவலை இந்தோனேசியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நாசா மற்றும் கலிபோர்னியா தொழில் நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள் செயற்கைகோள் போட்டோக்கள் மூலம் ஆய்வு நடத்தி இத்தகவலை வெளியிட்டுள்ளனர். |
Post date: 2018-08-13 10:20:08 Post date GMT: 2018-08-13 10:20:08 Post modified date: 2018-08-13 10:20:08 Post modified date GMT: 2018-08-13 10:20:08 |
Export date: Mon Feb 18 22:12:54 2019 / +0000 GMT This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ] Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com |