Home » விளையாட்டு » பிசிசிஐ-யின் புதிய தலைவராகும் கங்குலி

பிசிசிஐ-யின் புதிய தலைவராகும் கங்குலி

மும்பை, ஆக. 13:  பிசிசிஐ தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள சில புதிய விதிகளுடன் ஒப்பிடுகையில், அப்பதவிக்கு, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி தேர்வாக அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.

லோதா கமிட்டி, உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ள பரிந்துரைகளில், பிசிசிஐ தலைவர் பதவிக்கு சில புதிய விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே குறிப்பிட்ட காலம் வரை சில பதவிகளை வகித்தவர்கள், பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டியிட முடியாது. வேறு யார் தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுகிறார்கள் என பார்க்கும்போது, அதில் கங்குலி தான் முதல் இடம் பிடிக்கிறார்.

தற்போது, 3-வது முறையாக பெங்கால் கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருக்கும் கங்குலி, பிசிசிஐ-இன் உள் அமைப்புகளான டெக்னிகல் கமிட்டி, கிரிக்கெட் ஆலோசனை குழு (CAC), ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு (IPL Governing Council) உள்ளிட்ட பதவிகளிலும் இருக்கிறார். இதுவரை 4 வருடங்கள் அவர் பிசிசிஐ நிர்வாகியாக இருக்கும் நிலையில், புதிய விதிகளின்படி கங்குலி மேலும் இரண்டு ஆண்டுகள் நிர்வாகியாக இருக்கலாம். எனவே, அவர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வென்றால், இரண்டு ஆண்டுகள் வரை தலைவராக இருக்கலாம்.

கங்குலியைப் பொறுத்தவரை, பிசிசிஐ தலைவர் பதவிக்கு வேறு யாரும் போட்டியிடவில்லை என தெரிந்தால்தான், அவர் போட்டியிட ஒப்புக் கொள்வாராம் என்கிறார்கள், விஷயமறிந்தவர்கள். ஒரு காலத்தில் தடுமாறி வந்த இந்திய கிரிக்கெட் அணியை, உலகின் முன்னணி அணியாக மாற்றிக் காட்டிய கேப்டன் கங்குலி, பிசிசிஐ தலைவராக வேண்டும் என்பதே ரசிகர்களின் எண்ணம்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*