Home » Flash News » சீனாவில் விஜய்யின் ‘மெர்சல்’ ரிலீசாகிறது

சீனாவில் விஜய்யின் ‘மெர்சல்’ ரிலீசாகிறது

பெய்ஜிங், ஆக.11: தளபதி விஜய் நடித்து கடந்த ஆண்டு பெரும் வசூலை குவித்த மெர்சல் படம் சீனாவில் வெளியாகிறது.  அட்லி இயக்கத்தில் கடந்த ஆண்டு தளபதி விஜய்யின் மெர்சல் படம் வெளியானது. இந்தியா மட்டுமில்லாது வெளிநாடுகளிலும் இப்படம் வசூலை வாரிக்குவித்தது. சுமார் ரூ.250 கோடி அளவுக்கு வசூல் குவித்து சாதனை படைத்தது.  ஆசியாவின் சிறந்த படமாகவும் மெர்சல் தேர்வாகி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் லண்டனில் உள்ள அமைப்பு அவருக்கு சிறந்த நடிகருக்கான விருதையும் வழங்க இருக்கிறது. இந்த நிலையில் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த ஆண்டு சீனாவில் மெர்சல் படம் வெளியாக இருப்பதாக சினிமா வர்த்தக நிபுணர் ரமேஷ் பாலா இதனை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தூம் 3 படத்தை வெளியிட்ட எச்ஜிசி என்ற நிறுவனம் இப்படத்தை வெளியிட இருப்பதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார். மெர்சல் படக்கதை மிகவும் சிறப்பாக உள்ளது என்றும் எச்ஜிசி நிறுவன தலைவர் லி யிங் தெரிவித்திருக்கிறார். இந்த படம் இந்த ஆண்டு இறுதி அல்லது 2019-ம் ஆண்டு துவக்கத்தில் சீன மொழி டப்பிங்குடன் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் இயக்குனர் அட்லிக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.ஏற்கனவே ரஜினி படங்கள் சீனாவில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகின்றன. அதற்கு அடுத்தபடியாக இப்போது விஜய்யின் மெர்சல் படம் வெளியாக உள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*