Home » தமிழ்நாடு » திருமுருகன் காந்தி மத்திய சைதை கோர்ட்டில் ஆஜர்

திருமுருகன் காந்தி மத்திய சைதை கோர்ட்டில் ஆஜர்

சென்னை, ஆக. 10;பெங்களூரில் கைது செய்யப்பட்ட மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தமிழக போலீசார் அழைத்து வந்து சென்னை சைதை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு உள்ளனர்.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் மத்திய மாநில அரசுகள் சேர்ந்து நடத்திய துப்பாக்கி சூடு என்று 200க்கும் அதிகமான உலக நாட்டு பிரதிநிதிகள் முன் பேசினார். மேலும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராகநின்று போராட்டத்தை நடத்தினார். ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு பிரச்சனை பலரையும் பேச வைத்துள்ளது.

ஸ்டெர்லைட் நிர்வாகம் அவர் மீது மிகுந்த கோபத்தில் இருப்பதாகவும், சில மத்திய மாநில அரசியல் புள்ளிகள் அவரை கைது செய்ய அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அவரை உடனடியாக கைது செய்ய தமிழக அரசு õர்பில் லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இந்த லுக் அவுட் நோட்டீஸ் மூலம் அவர் எந்த விமான நிலையத்தில் இறங்கினாலும் கைது செய்ய வேண்டும்.மேலும்ஐரோப்பாவில் இருந்ததால், கண்டிப்பாக தென்னிந்தியாவில் ஏதாவது ஒரு விமான நிலையத்திற்கு அவர்வர வாய்ப்புள்ளது என்பதால், தென்னிந்திய விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுஇருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை பெங்களூர் விமான நிலையத்தில் வந்து இறங்கிய திருமுருகன் காந்தியை குடியுரிமை போலீசார் கைது செய்தனர். பின்னர் இதுகுறித்து பெங்களூர் போலீசார் தமிழக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.அதன்படி சென்னை தனிப்படை போலீசார் பெங்களூர் சென்று அவரை சென்னை அழைத்துவந்து சைதை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விசாணை நடைபெற்று வருகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*