Home » Flash News » குழந்தை ஏக்கம்:வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

குழந்தை ஏக்கம்:வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

 

அம்பத்தூர், அக்.10:அம்பத்தூர் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்த கொண்ட சம்பவம்அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறபப்டுவதாவது:-

அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தைச்சேர்ந்தவர் பாபு (வயது 45).இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது.இ துகுறித்து அவரை பார்ப்பவர்கள் எல்லாம் இன்னும் குழந்தையில்லையா என கேட்பது மனவேதனையில் இருந்தாராம்.குழந்தையில்லாத ஏக்கத்தில் சில நாட்களாக விரக்தியாக பேசி வந்தாராம்.

இந்தநிலையில் நேற்று அவரது மனைவி வெளியில் சென்றுபோது யாரும் இல்லாத நேரத்தில் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம்.
வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த மனைவி கணவன் தூக்கில் தொங்குவதை பார்த்து அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர் ஓடி வந்து பார்த்து போலீசுக்கு தகவல்கொடுத்தனர்.

அந்த தகவலின்படி திருமுல்லை வாயல்போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.குழந்தை இல்லா ஏக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*