Home » சினிமா » அக்டோபரில் வட சென்னை

அக்டோபரில் வட சென்னை

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ் கரண் தயாரித்துள்ள படம் ‘வடசென்னை’. இதில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, ராதா ரவி , சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெற்றிமாறன் இயக்கி உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வெங்கடேஷ், ராமர் எடிட்டிங் மேற்கொள்ள வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வடசென்னை பகுதியில் நடைபெற்று முடிந்துள்ளது. இறுதி கட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் 2-வது போஸ்டர் தனுஷ் பிறந்தநாளில் வெளியிடப்பட்டது. அக்டோபரில் படத்தை வெளியிட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டு வருகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*