Home » சினிமா » மீண்டும் இணையும் சுசீந்திரன், யுவன்

மீண்டும் இணையும் சுசீந்திரன், யுவன்

இயக்குனர் சுசீந்திரன் மற்றும்  இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி  நான் மகான் அல்ல, ஆதலால் காதல் செய்வீர் என்று ரசிகர்களிடம் நல்ல பெயர் பெற்ற படங்களில் இணைந்து ஒன்றாக பணியாற்றியுள்ளது.

இந்த படங்களுக்கு பிறகு சுசீந்திரன்,  யுவன்  ‘ஜீனியஸ்’  என்ற  படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளனர். கவிஞர் வைரமுத்து வரிகளில், சூப்பர் சிங்கர் இறுதி சுற்றில் இடம்பிடித்த ஸ்ரீகாந்த்  பாடிய பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவானது.  இப்படத்தை  சுதேசிவுட்ஸ் பிலிம்ஸ்  சார்பில் ரோஷன் தயாரித்து நடித்துள்ளார்.  படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்று படத்தொகுப்பு மற்றும் ரீரெக்கார்டிங் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.செப்டெம்பர் மாத இறுதியில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*