Home » சினிமா » ஜீவா உதவியாளர் இயக்கும் ‘ஜூலை காற்றில்’

ஜீவா உதவியாளர் இயக்கும் ‘ஜூலை காற்றில்’

காவ்யா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சரவணன் பழனியப்பன் தயாரிக்கும் முதல் திரைப்படம் ‘ஜூலை காற்றில்’. இந்த படத்தில் அனந்த் நாக், அஞ்சுகுரியன், சம்யுக்தா மேனன், சதீஷ், பலோமா மோனப்பா என பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு கதை திரைக்கதை அமைத்து இயக்குநராக அறிமுகமாகிறார் கே சி சுந்தரம்.இவர் மறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைக்க, டிமேல் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். அனுசரண் படத்தொகுப்பை கவனிக்க, ஜெயக்குமார் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
படம் பற்றி இயக்குநர் கூறுகையில், இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் காதல் பற்றிய பார்வையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. காதலர்கள் தங்களுக்குள் ஏற்படும் விரிசலையும், உரசலையும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை சுவராசியமாக சொல்லியிருக்கிறோம்.

இதன் படபிடிப்பை சென்னை, கோத்தகிரி, இலங்கை மற்றும் போர்க்சுகல் ஆகிய இடங்களில் நடத்தியிருக்கிறோம். விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸரை வெளியிடவிருக்கிறோம் என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*