Home » உலகம் » காற்றில் இயங்கும் கார் கண்டுபிடிப்பு

காற்றில் இயங்கும் கார் கண்டுபிடிப்பு

கெய்ரோ, ஆக.10:பெட்ரோல், டீசல், மின்சாரம் ஆகியவற்றில் இயங்கும் கார்களை பார்த்திருக்கிறோம். புதிய கண்டுபிடிப்பாக, காற்று மூலம்இயங்கும் காரை, வடிவமைத்து உலகின் பார்வையை தங்கள் பக்கம் திருப்பியுள்ளனர் எகிப்து மாணவர்கள்.

இந்நாட்டில் உள்ள ஹெல்வன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் சிலர், தங்களது புராஜக்ட்டில் ஒரு பகுதியாக இதனைவடிவமைத்துள்ளனர். இந்த காரில் ஒரு நபர் பயணம் செய்யலாம். ஆக்சிஜன் மூலம் இயங்கும். மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் செல்லும். ஒருமுறை ஆக்சிஜன் நிரப்பினால் 30 கி.மீ., துõரம் வரை பயணம் செய்யலாம். இதன் தயாரிப்பு செலவு வெறும் ரூ. 68,500.

தாங்கள் வடிவமைத்த காரை, மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையில்,மேம்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எரிபொருள் விலை உயர்வினால் கலங்கி நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு இந்த ஆக்சிஜன் கார் கண்டுபிடிப்பு வருங்காலத்தில் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*