Home » Flash News » தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்

தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்

சென்னை,ஆக. 10:டிவிஎஸ் வேணு சீனிவாசன் மீதான குற்றச்சாட்டு சரியானது அல்ல என்பதை உணர்ந்து அக்குற்றச்சாட்டிலிருந்து தமிழக அரசு அவரது பெயரை நீக்கி அறிவிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவரதுஅறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தொழிலதிபர் டி.வி.எஸ். குழுமத்தின் வேணு சீனிவாசன் மீது திருவரங்கம் கோவில் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், நீதிமன்றத்தில் அவர் முன்ஜாமின் கேட்டிருப்பதாகவும் செய்தி அறிந்து திடுக்கிட்டு, அதிர்ச்சி அடைந்தேன்.தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து நெல்லை மாவட்டம் வரையிலும் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள நவ திருப்பதி என்று அழைக்கப்படும் ஒன்பது வைணவக் கோவில்களுக்கும் வேணு சீனிவாசன் ஏற்பாட்டில் திருப்பணியும் குடமுழுக்கு விழாவும் நடத்தப்பட்டது.

அனைத்துச் சமூக மக்களும் ஒன்றுபட்டு இத்திருப்பணியில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்தில் இருபது கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து இந்தத் திருப்பணியில் ஈடுபட்டார்.ஒவ்வொரு கோவிலிலும் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய மானவர் களை குடமுழுக்கு விழாவுக்குத் தலைமையேற்கச் செய்தார். கபாலீ ஸ்வரர் கோவிலில் திருப்பணிக்குழுத் தலைவராக இவர் பொறுப்பேற்று, 2004 ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த ஆலயத்தில் உள்ள கபாலீஸ்வரர் மீது காண்ட பக்தியால் வேணு சீனிவாசன் இதற்கு 70 லட்ச ரூபாய் தன் சொந்தப் பணத்தை அறக் கட்டளையிலிருந்து செலவழித்திருக்கிறார்.

2015 ஆம் ஆண்டு திருவரங்கம் கோவில் அறங்காவலர் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார். திருமால் பக்தரான வேணு சீனிவாசன் தன்னுடைய சொந்த அறக்கட்ட ளையிலிருந்தே திருப்பணிக்கு ரூ. 25 கோடி செல வழித்திருக்கிறார்.

தமிழகத்திலும், கர்நாடகா, கேரளத்திலும் உள்ள நூறு ஆலயங்களுக்கு தனது சொந்த அறக்கட்டளை பணத்திலிருந்து செலவழித்து திருப்பணி செய்திருக்கிறார். திருவரங்கம் கோவிலில் முறைகேடு நடந்ததாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டில் வேணு சீனிவாசனையும் சேர்த்து வழக்குப் பதிவு செய்திருப்பது மிகப்பெரிய அநீதியாகும்.

தமிழ் மொழியின்பால் பற்றும், தமிழ் இலக்கியங்கள்பால் உயர்ந்த ஈர்ப்பும் கொண்டுள்ள நெறியாளர் வேணு சீனிவாசன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து தமிழக அரசு உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும்.

தூய உள்ளமும், கொடைத் திறனும் கொண்டு அறவழியில் நடப்போர் மீது வழக்குத் தொடுப்பதும், குன்றிமணி அளவும் தவறு செய்யாத ஒருவர் மீது அபாண்டமாகப் பழி சுமத்தி, அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதும் சகிக்க இயலாதது; மன்னிக்க முடியாதது என்பதை உணர்ந்து அக்குற்றச்சாட்டிலிருந்து தமிழக அரசு அவரது பெயரை
நீக்கி அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*