Home » Flash News » அதிமுக விதிகளில் மாற்றம் ஐகோர்ட் ஆணை

அதிமுக விதிகளில் மாற்றம் ஐகோர்ட் ஆணை

சென்னை, ஆக.10:அதிமுக கட்சி விதிகளில் மாற்றம் செய்ததை எதிர்த்து முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த மாற்றங்கள் குறித்து 4 வாரங்களுக்குள் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதிமுக கட்சி அடிப்படை விதிகளில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக் குழு கூட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன்படி பொதுச் செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்கள் இருவரும் கையெழுத்திட்டு கட்சி கட்டுப்பாடுகளை மீறியதற்காக பல்வேறு நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. முக்கியமாக கே.சி.பழனிசாமி மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் கட்சி விதிகளில் மாற்றம் செய்தது சரியல்ல என்றும் இதன் அடிப்படையில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் எடுத்த நடவடிக்கைகள் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதில் கட்சி விதிகளில் மாற்றம் செய்தது தொடர்பாக விசாரித்து 4 வாரத்தில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் அதிமுக கட்சியின் அடிப்படை விதிகளில் மாற்றம் செய்ததை தேர்தல் ஆணையம் ஏற்று கொண்டதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*