Home » Flash News » சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகை

சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகை

சென்னை, ஆக.10: சுதந்திர தின விழாவையொட்டி இன்று சென்னையில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

நாட்டின் 72-வது சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி நடைபெறு கிறது. கோட்டைகொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார். சென்னை தலைமை செயலகம் அமைந்துள்ள ராஜாஜி சாலையில், சுதந்திர தின முதல்நாள் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

இதில், கமாண்டோ படை, குதிரைப்படை, பெண் காவலர்கள், தேசிய மாணவர் படை மற்றும் மாணவ – மாணவியர் பங்கேற்றனர். மேலும், முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வதை போலவும், ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்ச்சி இன்று, நாளை மற்றும் 13 ஆகிய 3 தினங்களில் நடைபெறுகிறது. இதனால் ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு வேறு வழிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*