Home » தமிழ்நாடு » ஏகாதசி திதியில் மரணம் : துவாதசியில் அடக்கம்

ஏகாதசி திதியில் மரணம் : துவாதசியில் அடக்கம்

சென்னை, ஆக. 9:ஏகாதசி திதியில் ஒருவர் மரணமடைந்தால் துவாதசியில் தகனம் செய்யப்படுவது சிறப்பு மிக்கது என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. அத்தகைய ஒரு வாய்ப்பு பகுத்தறிவாதியான கருணா நிதிக்கு கிடைத்துள்ளது.

ஆசானின் அருள் கிடைத்தவர் களுக்கே இத்தகைய பெரும் பாக்கியம் கிடைக்கும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது.கருணாநிதி செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6.10 மணிக்கு ஏகாதசி திதியில் மரணமடைந்தார். நேற்று துவாதசி திதியில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்து விடாது. தனக்காக மட்டும் வாழாமல் பிறருக்காக நல்ல காரியங்களை செய்பவர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு அமையும் என்று ஆன்மீகவாதிகள் கூறுகின்றனர். இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவில் ராஜகோபுரத்தில் மோட்ச தீபம் நேற்று மாலை ஏற்றப்பட்டது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*