Home » Flash News » பாகிஸ்தானில் நடிகை சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் நடிகை சுட்டுக்கொலை

இஸ்லாமாபாத், ஆக.9:பாகிஸ்தான் நடிகை ரேஷ்மா சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் நடிகை ரேஷ்மா. தனது கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரேஷ்மா தனது சகோதரருடன் ஹகிமாபாத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இவருக்கும் கணவருக்கும் சண்டை ஏற்பட்டு கடும் வாக்குவாதமானது. இந்நிலையில் கணவர் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் ரேஷ்மாவை சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.

இந்த சம்பவத்தில் ரேஷ்மா உயிர் இழந்தார். ரேஷ்மா அந்த நபரின் 4வது மனைவி ஆவார். கணவருடன் பிரச்சனை ஏற்பட்டதையடுத்து அவர் தனது சகோதரர் வீட்டில் வசிந்து வந்தார்.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*